எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் சமாதானத்துக்கான கரங்கள் நீட்டப்பட்ட போதெல்லாம் மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ தெரிவித்துள்ளார்.
மாவை. சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான உறுப்பு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மரண செய்தி அதிர்ச்சியளித்தது
எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் பாராளுமன்றத்தில் சந்திக்கையில் இணக்கமாகவே செயற்படுவார்.
சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என மகிந்த விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

