உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் 50 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் நேற்றைய தினம் (10-04) காலை நடைபெற்றுள்ளது.

கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்திருந்தது

அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த குருக்கள்மாரையும் பக்தர்களையும் கடுமையான உடற்சோதைனைக்கு உட்படுத்தியே ஆலய வளாகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஆலயத்திற்கு செல்வோர் இன்னல்களை எதிர்கொண்டனர்.

கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வருகை தந்த தம்மை இவ்வாறு இன்னல்படுத்துவதற்கு பலரும் விசனங்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp