உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் வெளிநடப்பு

இன்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில், விருந்தினர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டதையடுத்து, சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளருக்கு எந்தவிதமான முன்னுரிமையும் வழங்கப்படவில்லை.

இதனைக் கண்ட தவிசாளர் ஜசீதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் குழப்பமடைந்து நிகழ்விடத்தை விட்டு வெளியேறினர்.

இது தொடர்பாக மேலதிகமாக தெரியவருகையில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தகனால் தவிசாளருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், நிகழ்வின் போது அவரை புறக்கணிக்கப்பட்டதற்காக பல தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp