உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்கள் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

நேற்றிரவு 9 மணியளவில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இவ்வாறு இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதாக தெரியவருகின்றத

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நேற்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த தொகை கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp