உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில்; மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (20-02-2025) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் இரு சாராருக்கு இடயையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆவாக்குழுவின் பாணியில் இடம்பெற்ற சம்பவத்தினால் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp