உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் மாடு திருடிய இளைஞனை மக்கள் அடித்தே கொன்றுள்ளனர்

அண்மையில் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து தாக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (25-03) அதிகாலை உயிரிழந்துள்ளார்

கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாட்டினை திருடியபோது இந்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கி, அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.

அதையடுத்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரை சிறைச்சாலை நிர்வாகம் பொறுப்பேற்று, அவருக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர் பற்றி இதுவரை அறியப்படவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் பொலிஸார் கோரியுள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp