உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிய விபச்சார நிலையம் முற்றுகை..!

கொழும்பு பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16.03.2026), மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தொரண சந்தை மற்றும் பேலியகொட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது இடம்பெற்றது.

இதன்போது, விபச்சார விடுதிகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் 28 வயதுடைய ஆண் ஒருவரும், ஒரு பெண்ணும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் களனி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பெண்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் லுணுகலை, மொரட்டுவ, தல்பே, முல்லெடியாவ, தெஹிகல்பிட்டிய, நாமல்கமுவ மற்றும் கல்நேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்