உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரனான ‘ ஷான் சுத்தா தப்பியோட்டம், கோட்டை விட்டசிறைக்காவலர்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் மே மாதம் 30 ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த ‘ஷான் சுத்தா’ வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ‘ஷான் சுத்தா’ இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp