செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் பெறலாம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் வசதிகள் செய்யப்பட்டு இன்று (06) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp