அரசு முன்னெடுத்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பில் ஆசிரியர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவது என இன்று ஒப்புக்கொண்டனர்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரா குமார திச்ஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, தரம் 6 பாடத்திட்ட மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை உறுதி செய்தனர்.
ஆசிரியர்கள் மறுசீரமைப்பின் அவசியத்தை ஏற்று, அரசுடன் முழுமையாக இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஆசியரியர்களின் பல தொழில் சங்கங்கள் இன்று ஜனாhதிபதி மற்றும் பிரதமருடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
புதிய திட்டங்கள் பெற்றோர்களின் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தரம் 6 மறுசீரமைப்புகள் 2027 முதல் செயல்படவுள்ளதாகவும், அதற்கு தேவையான கல்வி வசதிகள் அரசால் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதி செய்தார்.
கூட்டத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், சம்பள சமநிலை மற்றும் தலைமை ஆசிரியர் சேவை சவால்கள் போன்ற முக்கிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.
