செய்திகள் முக்கிய செய்திகள்

பிள்ளையானே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு திட்டமிட்டதாக அவரின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத் மௌலானா சனல் 4க்கு தெரிவித்தார் என அந்த அதிகாரி டெய்லி மிரருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மௌலானா ஏற்கனவே இது குறித்த விபரங்களை சனல் 4க்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத் மௌலானாவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சிஐடி அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சிஐடியினர் பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிஐடியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp