உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் உயர் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த பதவியில் பணியாற்றி வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘விஸ்டம் ஓக்’ (றுளைனழஅ ழுயம) எனும் நிறுவனம் 2016இல் நிறுவப்பட்டதுடன், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை நிர்வகித்து வருகின்றதாக சமூக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அர்ஜுன் மகேந்திரன், முதலீட்டு நிபுணராக அங்கு பணியாற்றி வருவதுடன், நிறுவனம் மற்றும் தனிநபர்களின் முதலீடுகள், நிதி நிர்வாகம், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்குப் பொறுப்பேற்று வருகிறார்.
இந்தச் செயல்திறனுக்காக அவர் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் 2016இல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டு விலகியதையும், பிணைமுறி மோசடி வழக்கை எதிர்கொள்ள சிங்கப்பூருக்குச் சென்றதையும் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், சிங்கப்பூர் அரசாங்கம் அவரை இதுவரை ஒப்படைக்க மறுத்திருப்பது காரணமாக, அவர் அந்நாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என சிங்கள மொழி மூல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp