செய்திகள்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஓய்வு பெறுகிறார்

இலங்கையின் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.

இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.

சவேந்திர சில்வா இலங்கையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார்.

58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 31, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.
அதன் பிறகு, அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகி நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றினார்.

அதாவது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் கீழ் அவர் செயற்பட்டிருந்தார்.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு தொடர்பில்இவர் மீது பாரிய குற்றச்சாட்டினை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp