செய்திகள்

பாதாள உலகத் தமிழ் தலைவரான தமிழ் இளைஞர் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டிருந்தது

வடமராட்சியை சேர்ந்த சந்தேகநபர், பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என தெரிவித்துள்ளார்

அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு, யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்ததாகவும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பொலிஸாரிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

உயிராபத்து இருப்பதாக சந்தேகநபர் தெரிவித்ததையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றதில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்

வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp