சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கை கல்வி அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆங்கிலக் கல்வி தொகுதியில் ஒழுங்கற்ற இணையதளத்தின் பெயர் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா தெரிவிக்கையில், தேசிய கல்வி நிறுவனம் இதற்காக தனியான உள்நாட்டு விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணும் நோக்கில் விரைவில் ஒரு உத்தியோகபூர்வ குழு நியமிக்கப்படவுள்ளதாகவும், பாடத்திட்டத்தை விநியோகிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் அமைச்சின் நிபுணர்களிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், குறித்த பாடத்திட்டம் மாணவர்களுக்கு விரைவாக வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்வி அமைச்சின் செயலாளர் அளித்த முறையீட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் துறை இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தியுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தற்காலிகமாக தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
