பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
சாத் ஷகீல் 56 ரன ஓட்டங்களுடனும் , ரிஸ்வான் 51 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பனிமூட்டத்தால் இன்றும் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆனது.
தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது
சாத் ஷகீல் 84 ஓட்டங்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
93 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அணித் தலைவர் ஸான் மசூத் அரை சதம் கடந்து 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்
இதுவரை பாகிஸ்தான் 202 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.


