உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் 2 விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் சேஸ்ட்டை செய்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று (15-03-2025 ) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக மது போதையில் இருந்த சந்தேக நபர் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதன்போது, விமான பணிப்பெண்கள் சம்பவத்தை விமானிக்கு தெரிவித்ததை அடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமானம் விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் அதிக அளவில் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேக நபர் இன்று கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp