உலகம் செய்திகள்

நைஜீரியா பாடசாலை நிகழ்ச்சியில் திடீர் நெரிசல்:30 பேர் பலி!

e0aea8e0af88e0ae9ce0af80e0aeb0e0aebfe0aeafe0aebe e0aeaae0aebee0ae9fe0ae9ae0aebee0aeb2e0af88 e0aea8e0aebfe0ae95e0aeb4e0af8de0ae9ae0af8d | Pathivu News

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பள்ளிக்கூடத்தில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் நிகழ்ச்சியைக் காணவும், பரிசுப்பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது.

எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்>ஆப்பிரிக்காவில் சிடோ புயல் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp