உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நுரைச்சோலை நிலக்கரி விவகாரம் பரபரப்பு

நுரைச்சோலை மின் நிலைய உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பான சர்ச்சையில்இ வெளிநாட்டு ஆய்வுகூட அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகோடாஇ நெதர்லாந்தின் ‘கொட்டெக்னா’ ஆய்வுகூடம் தயாரித்த அறிக்கை ஜனவரி 16ஆம் திகதிக்குள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட போதும்இ இதுவரை வெளியிடப்படாதது அரசியல் தலையீட்டால் என குற்றஞ்சாட்டினார்.

உள்ளூர் ஆய்வுகூடம் நிலக்கரி தரமற்றது என்றும்இ சுற்றுச்சூழலுக்கும் மின் நிலைய இயந்திரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறிய நிலையில்இ அதே முடிவை வெளிநாட்டு ஆய்வுகூடமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையேஇ 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழக்கமாக மணிக்கு 107 மெட்ரிக் தொன் நிலக்கரி போதுமான நிலையில்இ புதியதாக இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்த 120 மெட்ரிக் தொன் தேவைப்படுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ அந்த நிலக்கரியின் வெப்ப மதிப்பு தேவையான அளவுக்கு குறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி கொள்முதல் நடைமுறைகள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும்இ இதனால் எதிர்காலத்தில் நிலக்கரி பற்றாக்குறைஇ மின்சார செலவு உயர்வு மற்றும் மின்வெட்டு அபாயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில்இ அரசாங்கம் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்துஇ வெளிநாட்டு ஆய்வுகூட அறிக்கைக்காக காத்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp