உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நீதவான் மோசடி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்

அம்பாறையில் சம்மாந்துறை நீதவான் பதவி நீக்கம் செய்யப்பட்டதனையடுத்து புதிய நீதிவானக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நாளை பதவியேற்கவுள்ளார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான், இதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றிய காலப்பகுதியில், அந்நீதிமன்றத்தின் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த பொருட்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்து, நீதிச் சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமாரை கடந்த 2026.01.02 ஆம் திகதி முதல் பதவி நீக்கம் செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான், மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதவானாகக் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp