செய்திகள்

நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடி . சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜுலி கோசெக் தெரிவித்துள்ளார்

இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றக்குழு அதற்கான அனுமதியை வழங்கியவுடன், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
பல்வேறு வரி சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றில் வைத்து அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த ஜுலி கோசெக், குறித்த இந்த விடயங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையில் முன்வைக்கப்படவுள்ள மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்