உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாளை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் – மக்கள் தவிப்பு!

நாளை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நாளை காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வேலைநிறுத்தம் எதிர்வரும் 48 மணிநேரத்திற்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது மற்றும் மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே எட்டப்பட்ட உடன்படிக்கைகளைச் செயற்படுத்த சுகாதார அமைச்சு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியே இந்த முடிவை மருத்துவர்கள் சங்கம் எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், நோயாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு மகப்பேறு மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை நிலையங்கள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி வழமைபோல் இயங்கும் என சங்கம் உறுதி அளித்துள்ளது.
சுகாதாரத் சீர்திருத்தங்கள் மற்றும் பணிச் சூழல் தொடர்பான அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp