முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற எம்பிகளுக்கான உணவு விலையை 450 இருந்து 2000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் காலை உணவிற்கு 600 ரூபாவும், மதிய உணவிற்கு 1300 ரூபாவும், மாலை தேநீருக்கு 100 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னய ஆட்சியின் போது எம்.பியொருவரிட் காலை உணவிற்கு 100 ரூபாவும், மதிய உணவுக்காக 300 ரூபாவும் மற்றும் மாலை தேநீருக்காக 50 ரூபாவும் அறவிடப்பட்டது.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவகத்தில் விருந்தினரை உபசரித்தால் ஒரு எம்.பி.யிடம் இருந்து அறவிடப்படும் மேலதிக கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலோ மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் உணவு விலையை அதிகரிப்பது தொடர்பிலோ எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp