தேசிய பெண்கள் ஆணைக்குழு நடப்பு காலப்பகுதியில் செயல்படாமையால் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றம் வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி சாமிந்த்ராணி கிரியெல்ல, பெண்கள் உரிமைகள் முன்னேற்றம் தொடர்பான வலுவான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆணைக்குழுவை செயல்படுத்தாதது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
2026 வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இல்லாததும், ஆணைக்குழுவின் முதல் தலைவர் ரமணி ஜயசுந்தரன் பதவி விலகியதும், ஆணைக்குழுpவின் சுயாதீனம் மற்றும் செயல்திறன் குறைந்ததை காட்டுகின்றன.
ஜனாதிபதி செயலாளருடன் சந்திப்பினை கோரிய முன்னாள் தலைவர் நான்கு மாதம் முயன்றும் சந்திப்பிற்கான வாய்ப்பின்மை ஏற்பட்டது.
இதனால், பெண்கள் உரிமைகள் முன்னேற்றும் ஆணைக்குழு, சுயாதீன அமைப்பாக செயல்பட முடியாமல், அரசின் குறைந்த ஆர்வத்தால் சிக்கலான நிலையில் உள்ளதாக பெண்கள் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி சாமிந்த்ராணி கிரியெல்ல கவலை வெளியிட்டுள்ளாh.;
