செய்திகள் முக்கிய செய்திகள்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாமல் வலியுறுத்தல்

மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை. சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள்.

இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள்.

கடந்த காலங்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ‘ தேசிய பாதுகாப்புக்கு இம்முறை குறைவான நிதியை ஒதுக்கியுள்ளோம். ஆகவே அனைவரும் சுதந்திரமாக வீதியில் செல்லாம்’ அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். நடைமுறையில் நிலைமை அவ்வாறான உள்ளது.

நேற்று இரவு மித்தெனிய பகுதியில் சிறுமி உட்பட ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்றத்துக்குள் படுகொலை. நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியின் முன்னிலையில் படுகொல, துப்பாக்கிச்சூடு, பாதாள குழுக்களாக இருக்கலாம். அவர்களின் ஒழுக்கம் பற்றி பேசவில்லை.நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு இதுவே பாரதூரம்.

பாதுகாப்பு பிரச்சினையில்லை அனைவரும் எங்கும் செல்லலாம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் மறுபுறம் பட்டப்பகலில் மனித படுகொலைகள் இடம்பெறுகிறது.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது.

மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை.சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள்.இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றார் யார். நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். ஆகவே கடந்த காலங்களை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp