முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து  சாரதி பலி 19 ரஸ்சியர்கள் காயம்

தெற்கு அதிவேக வீதியில் இன்று (17-01-2025) காலை ரஸ்சிய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன்; மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ள அதே வேளை சுமார் 19 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

தங்காலை நோக்கிச் செல்லும் வீதியில் 138 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் அதிவேகமாக பயணித்த பேரூந்து பாரவூர்தியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது சுமார் 30 ரஸ்சிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சொகுசு பேரூந்தில் பயணித்துள்ளனர்

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp