முக்கிய செய்திகள்

திருமலையில் விபத்து, சாரதி உறக்கம், 2 குழந்தைகள், 3 பெண்கள்; உள்ளிட்ட 6 பேர் காயம்

திருகோணமலை சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி நேற்று (24) விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி 10 பயணிகளுடன் பயணித்த வேன் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந் டிமோ பட்டா வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 1 ஆண் உள்ளிட்ட 6 பேர் சேருவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வேனில் 2 குழந்தைகள் 6 பெண்கள், 2 ஆண்கள் பயணம் செய்திருந்தனர்.
சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp