உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற பவளப்பாறை பாதுகாப்பை மையப்படுத்திய ஒன்றுகூடல்..!

திருகோணமலை மாவட்டத்தில் பவளப்பாறை பாதுகாப்பை மையப்படுத்திய “இலங்கை பவளப்பாறை முன்முயற்சி” (Sri Lanka Coral Reef Initiative) திட்டத்தின் கீழ் விசேட கலந்துரையாடல் நேற்று (26.03.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார மற்றும்
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டெர்னி குமார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் Global Fund for Coral Reef ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இது “சிறப்பு முகாமைத்துவப் பகுதிக் ஒருங்கிணைப்புக் குழு” (SMACC) இன் முதல் கூட்டமாகும்.

குறிப்பாக, புறா தீவு தேசியப் பூங்கா (Pigeon Island National Park) மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல்சார் பரப்புகளின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் தொடர்புடைய அரச அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்டு பவளப்பாறைகளின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் நிலைத்த பயன் பெறல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.

மேலும், கடல்சார் வளங்களை பாதுகாக்கும் நோக்கில் எதிர்கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய சிறப்பு முகாமைத்துவ திட்டம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp