உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக அலங்கார தாவரங்களை கடத்தியவர் கைது..!

e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8be0aea4e0aeaee0aebee0ae95 e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aeb0 e0aea4e0aebee0aeb5 | Pathivu News

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று (27.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த 57 வயதுடைய இந்தச் சந்தேகநபர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்த அலங்காரத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாவரங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவரிடம் முறையான இறக்குமதி அனுமதிப்பத்திரமோ அல்லது தாவர சுகாதார பாதுகாப்பு சான்றிதழோ இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக முறையான சுங்க விசாரணைகளை மேற்கொண்ட கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட தாவரங்களை அழிப்பதற்காக கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp