முக்கிய செய்திகள்

திருகோணமலை கடலில் மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனர்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கடலுக்கு கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் இன்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்

நேற்று (26-01-2025) ஞாயிற்றுக்கிழமை பகல் வள்ளமொன்றில் ; மீன்பிடிக்கச் சென்ற இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 53 வயதுடைய மீனவர் கடலில் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் இன்று காலை பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டிருந்தது.

இவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இன்னுமொரு படகில் வந்த நபர்கள் குறித்த மீனவரின் படகை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என பிரதேசவாசிகளாலும் பொலிஸாhராலும் சந்தேகிக்கப்படுகின்றது

இந்நிலையில் தோணியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வேண்டுமென்றே மோதியதாக சந்தேகிக்கப்படும் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட படகோட்டி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp