முக்கிய செய்திகள்

தரம் 5ற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 319,284 பரீட்சார்த்திகளில் 51,244 மாணவர்களே சித்தி- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

நேற்று வெளியான பெறுபேறுகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

அதேநேரம், பல பரீட்சார்த்திகள் 187, 186 மற்றும் பல அதிகபடியான மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் ஆவர்.

2024 ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும்.

2023 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12மூ பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும் இந்த ஆண்டு முடிவுகளின்படி, 77.96மூ மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இது சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75மூ மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வெழுதிய மாணவர்களில் 37.70மூ பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

எனினும் 2023 உடன் ஒப்பிடும்போது ,து குறிப்பிடத்தக்க குறைவு.

கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 45.06மூ பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp