உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (01-03-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்தசுதாகர் ஆயுள் தண்டனை கைதியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி கடந்த 2018 இல் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிக்கிரியைக்கு கடும்பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

இறுதிக்கிரியையினை முடித்துக்கொண்டு சிறைச்சாலை பேருந்தில் ஆனந்தசுதாகர் ஏறச்சென்றவேளை அவரது பிள்ளை தந்தையின் கையைப் பிடித்து தானும் சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் கலங்கவைத்தது.

நீதிஅமைச்சரே, நீதியைத்தாருங்கள். அவரோடு சேர்ந்து சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களுக்கும் விடுதலை தாருங்கள் – என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp