உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

‘தமிழோசை ஆனந்தி’ என அறியப்பட்டஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

‘தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் கடந்த 21-02-2025 அன்று லண்டனில் காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம், இலங்கை வானொலியில் சனாவின தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார். சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.

1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை சென்றடைந்த அவர், பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்தார்.

பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர்,
மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருந்த நிலையில் அவர் இயற்கையெய்தினார்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp