முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மகிந்தவை பாதுகாக்க வேண்டும்- எஸ்.பி.திசாநாயக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும் அதன் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது.

காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (30-01-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும்.

நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மொத்த நுகர்வுக்கு தேவையான அளவில் தேசிய மட்டத்தில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பெரும்பாலான தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
தென்னை தோப்புக்குள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

இவ்வாறான பின்னணியில் எவ்வாறு அதிகளவான தெங்கு விளைச்சலை எதிர்பார்க்க முடியும்.

ஆகவே தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மனித காரணிகளுடன் பௌதீக காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்

விடுதலை புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp