செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செயதுள்ளது

சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இது கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன அழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பாடசாலை கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது

இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது

இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன்

கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp