உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் !

நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை நோக்கி புறப்பட்ட சிவகங்கை கப்பல் இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது.

3, மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஆரம்பித்ததால், இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த கப்பலானது இன்று மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன் இந்த கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp