இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவாகளிடமிருந்து விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
