முக்கிய செய்திகள்

தனியார் துறையினரின் 4,000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது

அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும் சுங்கத்தில் இருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

நாட்டில் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரச வணிக கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் துறைக்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இறக்குமதிக்கான காலக்கெடு கடந்த 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
அந்தக் காலகட்டத்தில், தனியார் துறையும் அரசாங்கமும் 167,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்தது.

அதில் அரசாங்கத்திற்குச் சொந்தமான 4,000 மெட்ரிக் தொன் அரிசி விடுவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பை விடுவிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையென சுங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp