உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜப்பானில் இளையோருக்கு வேலை வாய்ப்பு, சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

e0ae9ce0aeaae0af8de0aeaae0aebee0aea9e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb3e0af88e0aeafe0af8be0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0af87 | Pathivu News

ஜப்பானின் மின்சார பொறியியல் துறையில் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட ‘என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ்’ நிறுவனத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ் நிறுவனத்தின் தலைவர் கசுஹிரோ ஹன்சாக்கி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி ஆகியோர் தங்களது நிறுவனங்களின் சார்பில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், 20 முதல் 28 வயதுக்குட்பட்ட, தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழ் பெற்றவர்களாகவும், உயர்தர கல்வியை நிறைவு செய்தவர்களாகவும் உள்ள இலங்கை இளைஞர்கள், ஜப்பானின் மின்சார பொறியியல் துறையில் பணியாற்ற தகுதி பெறுவர்.

ஜப்பானிய மொழி அறிவு கூடுதல் தகுதியாக கருதப்படும் நிலையில், தேவையான தொழில்முறை பயிற்சி மற்றும் மொழிப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
ஜப்பானிய மொழி மற்றும் தொழில்முறை பயிற்சிகள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கும் சபுகஸ்கந்த தொழில்முறை பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp