செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களுடைய முதலீடுகளுக்கு நேயம்மிக்க நிறுவனச் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான பொறிமுறையை உருவாக்குவதற்காக இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடுகளை எட்டியுள்ளனர்.

உத்தேச ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதன் மூலம் ஐக்கிய அரபு எமிர் குடியரசின் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், முதலீடுகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு இயலுமை கிட்டியுள்ளது.

இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கிணங்க, 2025 உலக நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp