உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பொருளாதார கண்காணிப்புக் குழு..!

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட ‘பொருளாதார கண்காணிப்புக் குழு’, நேற்று (10.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழிலமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்குழுவின் செயலாளராகவும் அழைப்பாளராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயற்படுகிறார்.

இக்கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா, லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட் தலைவர் சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப், இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp