உலகம் புதியவை முக்கிய செய்திகள்

சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம்..!

e0ae9ae0ae95e0aeb2 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0ae95e0aeb3e0af81e0aeaee0af8d e0ae92e0aea9 | Pathivu News

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறது என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் சிறிபாலடி சில்வா, லசந்த அழகியவன்ன, ஜீ.எல்.பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடிலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜி.எல்.பீரிஸ்,

மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மோதல் நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தற்போது எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகக்கட்டமைப்பில் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் ஆராயவில்லை.

தற்போதைய இக்கட்டான நிலையில் சகல எதிர்க்கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.

எதிர்க்கட்சிகள் வலுவாக செயற்பட்டால் தான் அரசாங்கத்தை சிறந்த முறையில் வழிநடத்தலாம். ஆகவே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp