
உழவு இயந்திரம் மாணவர்களை ஏற்றிவிட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது
ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது
அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர், சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவான் எம்.ரி.சபீர் அகமட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது மதரஸாவின் அதிபரையும் ஆசிரியரையும் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 உதவியாளர்களை தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவுட்டுள்ளாhர்
கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மதரஸா முடிந்ததும் இந்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் அம்மாணவர்களை உழவு இயந்திரத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர் ஏற்றி அனுப்பியுள்ளார்
இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிர் பிழைத்த நிலையில், மேலும் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
12 – 16 வயதுக்குட்பட்ட 6 மாணவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதேவேளை, நேற்று உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவர் என இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏனையவர்களை தேடும் பணி நாளை தொடரவுள்ளது

