உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இன்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 209 ஆக உயர்வு

செம்மணி மனித புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலான அகழ்வுப் பணிகளில், புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்துடன், செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாளாக தொடரப்பட்டது.

நீதிமன்றம் அனுமதி வழங்கிய 45 நாட்களில், இன்றைய தினம் 39ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரையிலான கட்டப்படியான அகழ்வுப் பணிகள் மொத்தம் 48 நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இன்றைய தினம் எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன், இதுவரை 191 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய மதியத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடங்கவுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp