உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டம் புலத்திலும் முன்னெடுப்பு.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் in front of Sri Lankan High Commission in UK) வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும்.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்தது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொண்டனர்.

ஒழுங்கமைப்பு:
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ரூ அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து இருந்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp