செய்திகள் முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவருக்கு விளக்கமறியல் 25 பேர் பிணையில் விடுதலை

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் நேற்று (27-03) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட 27 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp