செய்திகள் முக்கிய செய்திகள்

சீனாவும் இலங்கையும் அம்பாந்தோட்டை சினாபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கவில்லை.

இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமான சைனோபெக் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டம் ஏற்கனவே ஒரு வருடம் கடந்தும், இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது.

கடந்த 2025 ஜனவரியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் சீனா பயணத்தின் போது, சீனாவின் அரசு சார்பான எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமான சைனோபெக் நிறுவனத்துடன் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தம் அம்பாந்தோட்டை சர்வதேசத் துறைமுகம் அருகே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டத்துடன் தொடர்புடையதாகும்
புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டால், தினமும் 2 லட்சம் பெரல்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர், குறித்த சீன நிறுவனம் உள்ளூர் சந்தையில் அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கோரியது.

இதற்கான கலந்துரையாடல்கள் இன்னும் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையைப் பற்றி கூறிய அதிகாரியொருவர், இறுதி முடிவு விரைவில் அமைச்சரவையால் எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் திட்டத்தின் தொடக்கம் மற்றும் செயல்முறை தொடர்பான முழு கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இலங்கை ஏற்கனவே எரிசக்தி சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துள்ளது.

தற்போது லங்கா ஐ.ஓ.சி. சீனோபெக் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.
அதே நேரத்தில், திருகோணமலைத் பகுதியை எரிசக்தி மையமாக மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை முயற்சிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp