செய்திகள்

சிவமோகன் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட பலர் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம்

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகனும் கட்pயிலிருநந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாஇன்று (28) இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடை நிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரியநேத்திரன் ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருக்கிறார்.

அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், கடந்த தேர்தலில் கட்சிக்கு எதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சை குழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது உன அவர் குறிப்பிட்டள்ளார்

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp