முக்கிய செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உலகலாவிய பணி ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உலகலாவிய பணி ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பை மற்றும் பாதணிகள் இன்று சனிக்கிழமை (25) திருகோணமலையில் உள்ள ஜூப்லி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன

குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண நிருவாக சபை பணிப்பாளர் யேசுதாசன் ரொகான்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சுமார் 150 மாணவ மாணவிகளுக்கான பாடசாலை உபகரணங்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டன.

ஆத்துடன் வாழும் போது வாழ்த்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் பல சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் குறித்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் புதிய அங்கத்தவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp