உள்ளூர்

சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் விளையாடக்கூடாது-ரணில்

சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் விளையாடக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டுக்கு சென்ற எந்த சந்தர்ப்பத்திலும், நாட்டிற்கு எதிராக பேசவோ செயல்படவோ செய்ததில்லை என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7-ல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

‘சர்வதேச நாணய நிதியம் – நான்காவது தவணை கொடுப்பணையை வழங்க முடியாது என்று அறிவித்துள்ளது.

இதனால், அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட உள்ளது.
அந்த அமைப்பின் வலியுறுத்தலின் பேரில், மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.’

ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்ட போதும், அரசாங்கத்தின் அரசியல் இரட்டைமுக போக்கே இன்றைய சூழ்நிலைக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இந்நிலையில் நடைமுறையில் உள்ள மின் கட்டணம், மின்சார உற்பத்தி செலவுகளை ஈடுசெய்யவில்லை என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாகும்.

எனவே, கட்டண உயர்வு தவிர்க்க முடியாது,’ என்று அந்த அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இவான் பாபஜோர்ஜியோ கூறியதையும் ரணில் நினைவூட்டினார்.

மேலும், இது; குறித்து அவர் விளக்கமளிக்கையில்:
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளில் தாய் நாட்டை எதிர்த்து பேசவில்லை.
நிதி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தான் வாஷிங்டனில் இந்தக் கேள்விகளை சந்தித்துள்ளார்.

எனவே, சர்வதேச விவகாரங்களை அரசியல் சாதகமாக பயன்படுத்தும் முயற்சிகளை அரசு தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் நாட்டுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்,’ என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: தேர்தல் வேட்பாளர் மருத்துவமனையில்!

https://www.youtube.com/@pathivunews/videos

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp